LOADING

Type to search

உலக அரசியல்

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பாலஸ்தீனியர்கள் 60 ஆயிரம் உயிரிழப்பு

Share

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தொடுத்து வரும் 21 மாத கால போரில், இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனினும், அவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்றோ அல்லது பயங்கரவாதிகள் என்றோ தெரிவிக்கவில்லை. ஆனால், இவர்களில் பாதி பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர் என தெரிவித்து உள்ளது.