ஈரானில் போரில் துருக்கியை நோக்கிய பாயும் ஏவுகணைகள்
Share
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து கடந்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா (மேற்கு ஆசியா) நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அத்துடன் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையம், விமான நிலையம் போன்றவற்றையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் இன்றுடன் 14-வது நாளாக தொடர்கிறது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தாக்குதலுக்கு ஈடுகொடுத்து அண்டை நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் எரிபொருள் வர்த்தகம் வெகுவாக பாதித்துள்ளது. இதற்கிடையே துருக்கியை நோக்கியும் ஏவுகணை தாக்குதலுக்கு முயற்சி நடைபெற்றுள்ளது. துருக்கி நேட்டோ அமைப்பில் உள்ளது. இதனால் நேட்டோ நாடு படைகள் அங்கு உள்ளது. மேலும், வான் பாதுகாப்பு சிஸ்டங்களும் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரான் போர் தொடங்கியதில் இருந்து 3-வது முறை எங்கள் நாட்டை நோக்கி ஏவுகணை பறந்தது வந்தது, அதை நேட்டோ வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து அழித்தன என துருக்கி தெரிவித்துள்ளது.




















