LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான திருநெல்வேலி முத்துக்குமாரசாமி நினைவுகூரப்பெற்றார்!

Share

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்ச்சி கடந்த 1ம் திகதி (01.02.2026) ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தின் தலைவரும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் ஆய்வாளர் சி.சு.யோதிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், வைத்திய கலாநிதி இ.சிவசங்கர், கணக்காளர் வ. தில்லைநாதன் ஆகியோர் அமரர் முத்துக்குமாரசாமி தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்து வாலிபர் சங்கத்தின் செயலாளர் யோ.சஜீதராவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நினைவுகூர் அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் செயற்பாட்டாளர்கள் அமரர் முத்துக்குமாரசாமியின் உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர் சி.சு.யோதிலிங்கம் எழுதிய தமிழ்த்தேசியப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தா த. முத்துக்குமாரசாமி’ என்ற கையேடும் வெளியிடப்பட்டது.