LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல் – 25 பேர் உயிரிழப்பு

Share

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 364வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா நேற்று நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் டெர்னோபில் நகரை குறிவைத்து 470 டிரோன்கள், 48 ஏவுகணைகளை மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.