LOADING

Type to search

இலங்கை அரசியல்

உடுவில் பேருந்து நிலையத்திலிருந்து முதியவரின் சடலம் மீட்பு!

Share

பு.கஜிந்தன்

உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. மாவை கலட்டி, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை என்ற முகவரியைச் சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் அப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக யாசகம் பெற்று வந்த நிலையில் 5ம் திகதி அன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை மீட்ட சுன்னாகம் பொலிஸார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.