LOADING

Type to search

உலக அரசியல் சினிமா

உலகத் தமிழ் திரைப்படத்துறைக்கு ஈழத் தமிழர் இணைந்தளித்துள்ள அற்புதத் திரைக்◌காவியம் ‘அந்தோனி’ என்னும் ‘கடற் காவியம்’

Share

பார் முழுதும் அந்தோனி

பார் முழுதும் அந்தோனி  பார்த்தவர்கள் பாராட்டும் வேளையில்…. பார்க்காதவர்கள்  பார்த்து மகிழுங்கள் எங்கள் அந்தோனியை படம் பார்க்குற ஆவல் எம்மையும் தூண்ட நெதர்லாந்தின் Eindhoven நகருக்கு சென்று படம் பார்த்தோம்..

இது படமல்ல நிஜங்களின் தரிசனம் கடலோர வாழ்வியலை நம் கண்ணுக்கு முன் காட்டிய திரைக்காவியம். ஒவ்வொரு பாத்திரங்களையும் இயக்குனர் கையாண்டு உயிர் ஊட்டிய பாங்கு எம் மனதை ஈர்த்தது.

எந்தவொரு கதாபாத்திரத்தையும் சிதைக்காது தேவையில்லாத காட்சிகளை அதில் திணிக்காது ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பது படத்தில் வரும் காட்சிகள்
சாட்சியப்படுத்தியது.

பிரமாண்டங்களையோ அன்றி ஆடம்பரங்களையோ நம்பாது நல்ல கதை இருப்பின் படத்தை சரியான முறையில் நகர்த்த முடியும் என்பதை அந்தோனி படக்குழு நிரூபித்திருக்கின்றார்கள் இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களம் என்று சொல்ல முடியாது ஒரு கதையை தேர்ந்தெடுத்து கடலும் கடல் சார்ந்த மானிட வாழ்வியலை இயல்பாகவும் அதேவேளை யதார்த்த நிலையை விட்டு சறுக்காது சளைக்காது இயக்குநர்கள் இயங்கி இருப்பது தெட்டத்தெளிவாகின்றது.

எனவே இயக்குநர்களான சுகிர்தன்,யனோசன் இருவருக்கும் என் முதன்மையான வாழ்த்துகள்!

ஒருபடத்தின் உயிர் நாடி என்பதே இயக்கமாகும்..அதனை இவ்விருவர் செவ்வனேவே இயங்கியிருக்கிறார்கள். அடுத்தபடியாக என்னதான் படத்தை இயக்கினாலும் இயக்குநர் விரும்பியமாதிரி படம் வேண்டும்… படம் பதிவு செய்யப்படல் வேண்டும் அந்த விருப்பத்தைஒளிப்பதிவாளர் மிக நேர்த்தியாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உயிர் ஓட்டங்களுக்கு ஒளி ஊட்டி எம்மனங்களை கவர்ந்த ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வத்தின் உழைப்பு வீண் போகவில்லை
என்பதை பல இடங்களில் நிருபித்துக்காட்டியிருக்கிறார்.

இசை

இசை ஞானியின்  இதமான இசை கடலலையின் ஒசை படத்தின் பின்னணி இசையென அந்தோனி வலம் வரும் வேளையில் பாடல்கள் கூட பொருத்தமாய் எங்கள் விருப்பமாய் தேவைக்கு தேர்வாய் பாடல்களும் ஒன்றிணைந்து எம்மை வருடிச்சென்றது. அத்தோடு சிறப்பான ஒலி உள்வாங்கப்பட்டிருக்கின்றது

திரையரங்கில் இருந்து பார்க்கின்ற போது மிகவும் துல்லியமாகவும் கதாபாத்திரங்களின் உரையாடல் எல்லாம் தெளிவாக இருந்தது இவை யாவையும் பார்க்க, கேட்க திரை அரங்கினுள் சென்று பாருங்கள் உணர்ந்து கொள்வீர்கள். மற்றும் இத்திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் சுரேஸ் பிரசாந் மிக நேர்த்தியாக முன்னுக்குப்பின் குழப்பாது தொகுக்கப்பட்டருப்பது படத்திற்கு வலுவான அம்சமாகும். எம் மண்ணின் மொழி  எம் மண்ணின் வாழ்வியலோடு யதார்த்தமான நிலைகளை முன் நிறுத்தி திரைப்படம் நகரும் அந்தோனி நம்மை மகிழ்வித்ததோடு நம்மை அழவைக்கவும் தவறவில்லை

நம் சினிமாவையும் உலகச் சினிமா இனி கவனிக்கும் என்பதை அந்தோனி உணர்த்தி நிற்பதோடு நம் சினிமாவை நம்மவர்களிடம் கொண்டு செல்லவேண்டுமென்ற இப்படத்தின்தயாரிப்பாளர் சுவிஸ’ வாழ் ஓசை இரமணாவின் உத்வேகம் இப்படத்தின்இன்னுமொரு மிகப்பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும்.

இதில் சம்மாட்டியார் கதாபாத்திரத்தில் தோன்றி நம்மை நெகிழவும் வைத்திருக்கின்றார்… தான் மட்டும் வளர தன்னை முன்னிலைப் படுத்தவர்களின் மத்தியில் கலைவளர கலைஞர்களை ஒன்றிணைத்து ஒரு தரமான படைப்பைத் தந்திருக்கின்றார் அதனால் தான் அவருக்கு கலை வள ( ள)ரி என்னும் பட்டத்தை கொடுத்தனரோ என்று எண்ணத்தோன்றுகிறது…

ஒரு நல்ல தயாரிப்பாளர் கலைமீது தணியாத தாகம் கொண்டதினால் தன் முதலைப்போட்டு தன் உழைப்பையும் கொடுத்து இப்படம் சிறப்பாக வருவதற்கு வழி கோலியிருக்கின்றது… அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

மேலும் இப்படத்திற்காக கதைக்களம் அக்கதைக்கான உரையாடல்கள் நன்கு திட்டமிட்டு கூடவே இயல்பாய் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அழகாகவும் , நன்றாகவும் எங்கடை மொழியில் கதைப்பதும் அதனை சரியான முறையில் கையாளப்பட்டிருப்பதை உரையாடல்கள் உரைத்து நிற்க நம்மை இரசிக்கவும் வைத்தது. மேலும் சில விடயங்களை நாம் கேட்டறியக்கூடும் ஆனால் பல விடயங்களை நாம் நேரடியாக பார்த்தும். கேட்பதிலும்தான் அதை உணர்ந்து கொள்ள முடியும்
உள் வாங்கமுடியும்

அந்த வகையில் அந்தோனி ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் அதனை திரை அரங்குகளில் சென்று பாருங்கள்.. நீங்களும் அவ்வகையான உணர்வுக்கு செல்வீர்கள் என்பதில் எந்தவித ஐயமும் இருக்காது. இந்திய இலங்கை கலைஞர்களின் இணைவும் ஊக்கமுடன் உழைத்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் தோளோடு தோளாய் துவளாது நின்றவர்களுக்கும் என் பாராட்டுகள். கரையூரான் போகாத இடமுமில்லை அந்தோனி ஓட்டாத படகுமில்லை உலக வலம் வரும் அந்தோனிக்கு உங்கள் ஆதரவுகள் பெருகட்டும் உலக அரங்கினிலும் நம் சினிமாவும் பேசு பொருளாகட்டும்.!

வாழ்த்துகள்!
அன்புடன் சிறி.