LOADING

Type to search

சினிமா

ஊட்டியில் மல்டி கார் பார்க்கிங் அமைத்து தரப்படும் – சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி

Share

ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைத்து தர வேண்டும் எனவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முன்பாக அதனை அமைத்து தர வேண்டும் என சட்டசபையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மற்றும் கோவையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைத்தும் சரியான பயன்பாடு இல்லை. ஊட்டி கொடைக்கானலுக்கு இது அவசியம் என்றாலும் நிலத்தின் விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் அவசியம் கருதி ஊட்டியில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.