எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் சந்திப்பு
Share
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. தமிழக பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் சென்னை வந்தார். இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மத்தியமந்திரி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை தனியார் ஹோட்டலில் நடந்த பியூஷ் கோயல் – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. அதிமுக – பாஜக இடையே நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.




















