எனக்கு ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர் பேராசிரியப் பெருந்தகை – மு.க.ஸ்டாலின் புகழாரம்
Share
பேராசிரியர் க. அன்பழகனின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறி இருப்பதாவது: பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின் நிறைவுக்குப் பிறகு எனக்கும் ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர். நட்புக்கும்-கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த நம் இனமானப் பேராசிரியரின் நினைவு நாளில் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம்! உழைப்போம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.




















