LOADING

Type to search

இலங்கை அரசியல்

“என் கணவர் சண்டைக்கு தயார்” – சீமானின் சவாலை ஏற்ற வீரலட்சுமி தேதியை அறிவித்தார்!

Share

வீரலட்சுமியின் கணவருடன் சண்டைக்கு தயார் என சீமான் அறிவித்த நிலையில், காணும் பொங்கலன்று போட்டி நடைபெறும் என வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

சீமான் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக, நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி களம் இறங்கினார். இதனால் நாம்தமிழர் கட்சியினருக்கும், வீரலட்சுமிக்கும் மோதல் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டுவதும், சவால் விடுவதும் என மோதல் போக்கு நீடித்தது. சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றாலும், சீமான் வீரலட்சுமி இடையே உரசல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், சீமானை தொடர்பு கொண்ட நபர், சண்டை போட்டிக்கு தயாரா என சவால் விட்ட காணொளி ஒன்று வெளியானது. அது வீரலட்சுமியின் கணவர் கணேசன் என தெரிவித்த நிலையில், சண்டைக்கு தயார் என சீமான் அறிவித்தார். இதை ஏற்றுள்ள வீரலட்சுமி, தனது கணவருடன் சீமான் மோதும் இடம் மற்றும் தேதியை அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அந்த இடத்தில் நின்று காணொளியாக பதிவு செய்து அறிவித்துள்ளார்.