ஏறாவூரில் போதை வியாபாரி ஒருவர் கைது செய்த பொலிசார் மீது தாக்குத் நடத்திய பெண் ஒருவர் உட்பட இருவர் கைது
Share
(கனகராசா சரவணன்)
ஏறாவூர் மீராங்கேணி பிரதேசத்தில் 11230 மில்லிகிராம் ஹரோயின் போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை கைது செய்த பொலிசாரை கடமையை செய்யவிடாது அவர்கள் மீது தாக்குதலிலல் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவரை 28ம் திகதி திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான அன்று இரவு முற்றுகையிட்ட பொலிசார் போதை வியாபாரி ஒருவரை 11230 மில்லிகிராம் ஹரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்
இதனையடுத்து பொலிசார் தமது கடமையை செய்யவிடாது பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்ட 36 வயதுடைய பெண் ஒருவரையும் 24 வயதுடைய இளைஞன் ஒருவரையும் போதை வியாபாரி உட்பட 3 பேரை கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்




















