LOADING

Type to search

சினிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா

Share

நடிகர் தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்றை பெற்றதை தொடர்ந்து ‘வை ராஜா வை’, ‘லால் சலாம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா தற்போது புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அறிவிப்பு வெளியானது. கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9-வது படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இதற்கு முன்னதாக ‘வை ராஜா வை’ படத்தில் ஐஸ்வர்யா- யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்து பணியாற்றியது. தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.