LOADING

Type to search

இலங்கை அரசியல் கனடா அரசியல்

கனடவில் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க’த்தின் செயற்பாடுகளை சீர்குலைக்கும் ‘குழப்பவாதிகள்’ ஐரோப்பிய நாடுகளுக்கும் புகுந்துள்ளனரா?

Share

அவதானமாகச் செயற்படுமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களின் அவசர வேண்டுகோள்

யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு நிறுவப்பெற்று தற்போது தனது நேர்த்தியான செயற்பாடுகளாலும் உலகெங்கும் பல நாடுகளிலும் கிளைகளை நிறுவி செயற்படும் உன்னத பணிகளினாலும் சிறப்பான தலைமைத்துவத்தைக் கொண்டும் கனடாவில் தலைமையகமாகக் கொண்டியங்கும் ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க’த்தின் செயற்பாடுகளை சீர்குலைக்கும் ‘குழப்பவாதிகள்’ ஐரோப்பிய நாடுகளுக்கும் புகுந்துள்ளனரா என்ற கேள்வியை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இயக்குனர் சபையினர் தற்போது எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக எமது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தோடு இணைந்து செயற்பட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பஞ்ச் ராமலிங்கம், ஜேர்மனியில் வாழ்பவரும் மறைந்த இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் சகோதரருமான தங்கராஜா மற்றும் மறைந்த முன்னாள் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி இறந்தவரும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் புதல்வருரும் தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருபவருமான அமிர்தலிங்கம் பகிரதன் ஆகியோரே இவ்வாறான குழப்பவாதிகளாக இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக எமது இயக்கத்தின் இலட்ச்சினையையும் பெயரையும் சட்டவிரோதமாகப் பாவித்தும் தற்புகழ்ச்சியை தேடிக் கொள்ளும் வகையிலும் செயற்பட்டு வருகின்றார்கள். இவ்வாறான சட்ட விரோதச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு எமது புனிதமான இயக்கத்தின் பெயருக்கும் அதன் வளர்ச்சிக்கும் பங்கம் விளைவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இந்த ‘குழப்பவாதக் கும்பல்’ தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் தங்கள் ‘கைவரிசையை’க் காட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேற்படி பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மூவரோடும் மேலும் சிலரும் சேர்ந்து இந்த தீய செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதை எமது தலைமைப்பீடம் கண்டிக்கின்றது. ”
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள அதேவேளை தமிழ் மக்களையும் அறிஞர் பெருமக்களையும் அவதானமாகச் செயற்படுமாறு மிகவும் வினயமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் மேற்படி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

“கடந்த 45 வருடங்களாக சிறப்பான முறையில் இதயசுத்தியோடு இயங்கிய இயக்குனர் சபையைக் கொண்ட எமது இயக்கத்தை தவறான முறையில் தங்கள் கைகளுகுள் எடுத்து அதன் மூலம் சில நாடுகளில் வாழும் பரவலர்கள் சிலரிடம் நிதியைச் சேகரித்தும் சிறியளவில் மாநாடுகள் என்ற பெயரில் தங்கள் சுயபுகழ்பாடுவதுமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் மேற்படி ‘குழப்பவாதிகளின் கும்பல்” தற்பொழுது தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தங்கள் ‘கைவரிசைகளை’க் காட்டத் தொடங்கியுள்ளார்கள்.

இதனால் எமது உண்மையான இயக்குனர் சபை தனது பணிகளை தொடர்ந்து ஆற்றுவதில் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே மேற்படி குழப்பவாதிகளை இனங்கண்டு ஒதுக்கும் நடவடிக்கைகளை ஆங்காங்கே உள்ள தமிழ் அறிஞர்களும் பண்பாட்டு விரும்பிகளும் கல்வியாளர்களும் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” என்று உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் உலகத் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.