LOADING

Type to search

இலங்கை அரசியல்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர் சடலமாக மீட்பு!

Share

பு.கஜிந்தன்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் 24ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து பி.மரியதாசன் (வயது 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தவேளை வியாழன் அன்றையதினம் உயிரிழந்துள்ளார். அன்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.