கனடாவில் நிதித்துறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கும் நிறுவனத்தை நடத்திவரும் வெற்றியாளரான திருமதி ஷர்மிலி தங்கராஜா
Share
இவ் உலகத்தில் பல விதமான பரிணாமங்களை ஒரு பெண் அடைகிறாள். வாழ்க்கையில் சவால்களையும் இன்னல்களையும் எதிர்த்து சாதனைகள் பல படைத்து கொண்டிருக்கும் உறுதியான மனமும் உயர்வான எண்ணமும் கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள்.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரின் பெண்கள் நடத்த வந்தோம்”என்ற பாரதியின் வரிக்கேற்ற ஒரு புதுமைப் பெண் பற்றிய தகவல்களை இவ்வாரத்தின் ‘கனடா உதயன்’ பத்திரிகை வாயிலாக உங்களோடு நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம்.
திருமதி ஷர்மிலி தங்கராஜா யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் பிறந்தவர். அவரது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கற்றவர். தன்னுடைய பதின்ம வயதிலேயே கனடாவிற்கு அவரது பெற்றோருடன் குடியேறினர்.அதன் பின்னராக இவருடைய பாடசாலைக்கல்வியை மீண்டும் கனடாவில் தொடர்ந்தார். அவரது மேற்படிப்பாக Accounting finance என்னும் தறையை தேர்வு செய்து அதில் பட்டம் பெற்றார் .
கடந்த ஐந்து வருடங்களாக கணக்கியல் நிதி தொடர்பான Shilo Financial Accounting & Business Professional Services என்ற நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகின்றார். அந்தளவில் இந்த துறை சார்ந்தும் இந்த துறையை இவர் தெரிவு செய்தற்கான காரணம் என பல விடயங்களை அவர் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.
1. கடந்த ஐந்து வருடமாக சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகின்றீர்கள் இந்த துறையில் உங்கள் ஆரம்பம் பற்றி கூற முடியுமா ?
என்னுடைய 25 ஆவது வயதில் இந்த துறையில் என்னுடைய பணியை ஆரம்பித்தேன். நிறைய போட்டிகள் சவால்கள் காணப்பட்டன. ஒவ்வொரு நாளும் புது அனுபவங்களை பெற முடிந்தது.20 வருடங்கள் பல நிறுவனங்களில் பணி புரிந்து இந்த துறை சார்ந்த அறிவை பெற்று கொண்டதன் ஊடாக கடந்த ஐந்து வருடமாக எனது சொந்த நிறுவனமான Shilo Financial Accounting & Business Professional Services யை வெற்றிகரமாக நடத்தி வருகின்றேன்.
2.இந்த துறையை நீங்க தேர்வு செய்தற்கான காரணம் என்ன?
வியாபாரத்தில் எனக்கு அதிக ஆர்வம். புது புது மனிதர்களை சந்திக்க மற்றும் அவர்களோடு உரையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எப்பவும் புதிதாக கற்றுக்கொள்ள விருப்பம். எப்பொழுதும் நான் சோர்வடைய மாட்டேன். சவால்களை சந்திக்க பிடிக்கும் இவ்வாறான காரணங்கள் தான் என்னை இந்த துறையை தேர்வு செய்ய வைத்தது.
3. இந்த துறையில் நீங்கள் கண்ட சவால்கள் என்ன அதை எவ்வாறு எதிர் கொண்டீர்கள்?
எல்லாத் துறைகள் போன்று இந்த துறையிலும் ஆண்களே அதிகமாக காணப்படுகின்றார்கள். இது பெரும் சவாலாகவே காணப்பட்டது.நிறைய போட்டிகள் இருக்கும். ஒரு நல்ல நிலைக்கு வருவது கடினமாகவே இருந்தது. எவ்வளவு அறிவாக வேலை செய்தாலும் அதிக உழைப்பை கொடுக்க வேண்டியதாகவே இருந்தது. இருந்தும் அயராது உழைத்து பல அனுபவத்தை பெற்று இன்று இவ்வாறாக இருக்கின்றேன்.
4. உங்களுடைய நிறுவனத்தின் ஊடாக உங்களின் வடிக்கையார்களுக்கும் இந்த சமூகத்திற்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்க பெறுகின்றன?
என்னுடைய வாடிக்கையாளர்கள் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி அவர்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டியது எனது கடமை. முதலில் வியாபாரம் சார்ந்த உண்மை தன்மைகளை எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்துவோம்.நிதி முகாமைத்துவம் வியாபாரத்திற்கு மிக முக்கியமானது அதனால் நிதி தொடர்பான பல அறிவுரைகளை வழங்குவோம் பின்னர் ஒரு தொழிலை எவ்வாறு எப்படி ஆரம்பிப்பது எப்படி வியாபாரத்தில் வருமானத்தை அடுத்த படிக்குப்பிக்கொண்டு செல்வது போன்ற அவர்களின் எதிர்கால கனவுகளிற்கு வழிகாட்டியாக நாங்கள் செயற்படுகின்றோம். எனவே எனது வாடிக்கையாளர்கள் வெற்றி பெரும் போது நானும் வெற்றி பெறுவேன்.
5. உங்களுடைய குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் எவ்வாறு சமநிலையாக பேண முடிகிறது ?
என்னுடைய கணவரும் இதே துறையில் தன பணி புரிகின்றார் அதனால் எங்களால் புரிந்துணர்வோடு பணியாற்ற முடிகிறது . எனக்கு இரண்டு பிள்ளைகள் நாங்கள் இருவரும் பனி புரிவதால் எங்களுக்கு உதவிக்கு ஆட்களை நியமித்து இருக்கின்றோம் அவர்கள் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றார்கள்.
6. உங்களை போன்று சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்லும் விடயம் என்ன ?
Don”t Give Up. எப்பொழுதும் உறுதியாக இருங்கள் . உங்களுடைய துறையையும் உங்களுடைய சொந்த விடயங்களையும் பிரித்தறிய தெரிய வேண்டும். உங்களுடைய தொழில் சார்ந்த தொடர்பாடல்களை அதிகரித்து கொள்ளுங்கள். மக்களை அதிகமாக சந்தியுங்கள் புதிய அனுபவம் பெருகும். தைரியமாக உங்களுடைய துறையில் வெற்றி நடை போடுங்கள்.
நன்றி ஷர்மிலி தங்கராஜா உங்கள் மென்மேலும் வெற்றி பெற உதயன் பத்திரிகையின் சார்பாக வாழ்த்துக்கள்.
நேர்காணல்” சாலினி பிள்ளை




















