LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா-‘ கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ நடத்திய குளிர்கால ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது!

Share

கனடாவில் கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தவறாது தங்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்திவரும் ‘ கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ நடத்திய குளிர்கால 2026ம் ஆண்டுக்கு உரிய ஒன்றுகூடல் கடந்த7ம் திகதி சனிக்கிழமையன்று ஸ்காபுறோ எஸ்டேட் பேங்குவற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது!

ஒன்றியத்தின் தற்போதைய தலைவர் திரு கேதா நடராஜா ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் என அனைவரோடும் இணைந்து மேற்படி ஒன்றுகூடலை ,இராப்போசன விருந்து மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

நூற்றுக் கணக்கான விருந்தினர்கள் அன்றைய மண்டபத்தில் ஒன்றுகூடியிருந்தனர். அவர்களின் யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் மற்றும் அங்கு திருமணம் செய்தவர்கள் – நண்பர்கள் உறவினர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் என நிறைந்த விழாவாக

இவ்வருடத்தின் குளிர்கால ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது என்றால் அது மிகையாகாது!