கனடா-கோர்ன்வோல் நகரில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் 23ம் திகதி புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
Share
கனடா – கோர்ன்வோல் நகரில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் 23ம் திகதி புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கோர்ன்வோல் – மொன்றியால் மற்றும் ரொறன்ரொ பெரும்பாகம்- பிரம்ரன் ஆகிய நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகை தந்து பக்திபூர்வமாக இரதோற்சவத்தைக் கண்டு களித்தார்கள்.
இரதோற்சவம் நான்கு வீதிகளிலும் பவனி வந்தபோது காவடி எடுப்பவர்களும் பிரதட்டை செய்த அடியார்களும் உணர்வுபூர்வமாக தங்கள் நேர்த்திக்கடனைகளை அனுஸ்டித்த தருணத்தில் வானத்திலிருந்து ஹெலிகெப்டர் ஒன்றிலிருந்து மலர்கள் தூவப்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
























