கனடா- ஸ்காபுறோவில், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்று நேர்த்தியான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பெற்ற Miss Tamil Universe- Queens of Angels – 2025 ‘தேவதைகளின் அரசி’
Share
கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் Miss Tamil Universe- Queens of Angels – ‘தேவதைகளின் அரசி’ யைத் தேர்ந்தெடுக்கும் மேடைத் தேர்வு இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்று கடந்த 27-06-2025 அன்று வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
கனடா- ஸ்காபுறோவில், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்று நேர்த்தியான போட்டிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பெற்ற இவ்வாண்டின் Miss Tamil Universe- Queens of Angels – 2025 ‘தேவதைகளின் அரசி’யாக படிப்படியான தேர்வுகள் மற்றும் ஆற்றல்களை வெளிக்காட்டல் ஆகியவற்றினைத் தொடர்ந்து செல்வி ராகவி ஜோன்னா நரேந்திரன் தேர்ந்தெடுக்கப்பெற்றார். இரண்டாவது இடத்தை செல்வி அனுஷாதேவி மாறனும் மூன்றாவத இடத்தை செல்வி வெங்கடராஜலக்சுமியும் தட்டிக் கொண்டார்கள். எல்லாமாக பதினொரு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த Miss Tamil Universe- Queens of Angels – 2025 ‘தேவதைகளின் அரசி’ யை தேர்ந்தெடுக்கும் போட்டியில் போட்டியாளர்களிடம் பல ஆற்றல்கள். எமது மொழி மீதான ஆர்வம் மற்றும் அறிவு அத்துடன் பண்பாடு மற்றும் நுண்கலைகளைப் பற்றி தேடல் உலக விடயங்கள் பற்றிய அறிவுத் தேடல் ஆகியவை தகுதியைத் தீர்மானிக்கும் அளவுகோள்களாகப் பார்க்கப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத் தக்கது.
அன்றைய முழு நீள விழாவில் பல விடயங்கள் சேர்க்கப்பெற்று மேலும் சிறப்பைக் கொடுத்தன.
குறிப்பாக Miss Tamil Universe- Queens of Angels – 2025 ‘தேவதைகளின் அரசி’ தேர்வை ஆரம்பித்து நடத்தி வரும் திருமதி சசிகலா நரேந்திரா அன்றைய தினம் இரண்டு சமூகப் பணிகளுக்கு நிதி அன்பளிப்பு வழங்கியிருந்தார்.
முதலாவது நிதி அன்பளிப்பாக தற்போது திட்டமிடப்பெற்று வரும் கனடாவில் அமையப் போகின்ற ‘தமிழர் சமூக மையம்’ ( Scarborough Tamil Community Centre ) நிதிக்காக திரு நரேந்திரா-திருமதி சசிகலா அவர்களது குடும்பத்தினர் வழங்கிய பத்தாயிரம் கனடிய டாலர்களுக்குரிய மாதிரிக் காசோலை ‘தமிழர் சமூக மையம்’ நிதிக்குழுவின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பெற்றது
மேலும். இரண்டாவது நிதி அன்பளிப்பாக தற்போது கிழக்கிலங்கையில் கனடா- முன்னாள் இலங்கை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பெற்று வரும் வீடற்றவர்களான பத்து வீட்டுத் திட்டத்தில் அடங்கும் ஒரு வீட்டுக்கான செலவுத் தொகையான ஐயாயிரம் கனடிய டாலர்கள் பெறுமதியான மாதிரிக் காசோலை கனடா- முன்னாள் இலங்கை வர்த்தகர்கள் சங்கத்தின் முக்கிய இயக்குனர்களிடம் மேடையில் கையளிக்கப்பெற்றது.


























