LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா- ஸ்காபுறோவில் சிறப்புற நடைபெற்ற நடைபெற்ற அரியானா தனேந்திரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Share

கனடாவில் நீண்ட காலமாக வெற்றிகரமாக இயங்கிவருகின்ற நாட்டிய கலாசேஸ்த்திர நடனக் கல்லூரியின் அதிபர் ஶ்ரீமதி தேனுஜா திருமாறன் அவர்களின் மாணவியும் தனா தனேந்திரன் தம்பதியின் புதல்வியுமான நடனச் செல்வி அரியானா தனேந்திரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஸ்காபுறோவில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்படத்தில் 3ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சிறப்புற நடைபெற்ற நடைபெற்றது.

அரங்கேற்ற விழாவை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ரமணன் சந்திரசேகரமூர்த்தி அவர்களும் செல்வி மொனிசா மோகன் அவர்களும் சிறப்பாக தொகுத்துவழங்கினார்கள்
ஆரம்பத்தில் புஸ்பாஞ்சலி- அலாரிப்பு ஆகிய உருப்படிகளோடு மேடையில் தோன்றிய பரதநாட்டியச் செல்வி அரியானா தனேந்திரன் தனது குரு மற்றும் பக்கவாத்தியக் கலைஞர்களாக மேடையில் அமர்ந்திருந்த இசை வித்தகர்களுக்கு மரியாதையும் வணக்கமும் சமர்ப்பணம் செய்து தனது அன்றை அரங்கேற்றத்தை விருப்புடன் ஆரம்பித்தார். சபையில் அமர்ந்திருந்த ரசித்த அனைவரும் தங்கள் ரசனையை கரகோசங்கள் மூலம் வெளிக்காட்டினார்கள்.

மேற்படி அரங்கேற்றத்தில் அரியானா அவர்களின் குரு தேனுஜா திருமாறன் அவர்கள் நட்டுவாங்கம் மற்றும் நடனங்கள் மீதான மே;றபார்வை ஆகியவற்றையும் கவனித்து தன் பணியைச் சிறப்பாக ஆற்றினார்.

பாடல்களை இனிமையாகப் பாடினார் அருண் கோபிநாத் அவரது பாடல்களில் நிறைந்திருந்து கம்பீரமும் இனிமையும் அரியானாவிற்கு மேலும் உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும் என்றே கூறலாம். மிருஙதங்க இசையை நன்கு அறியப்பெற்றவரான ரதிரூபன் பரஞ்சோதி அவர்கள் வழங்கி தனது தாள லய இசையினால் நடனங்களின் செழுமையைப் பாதுகாப்பவரா அந்த மேடையில் விளங்கினார்.

புல்லாங்குழல் இசை வழங்கிய டாக்டர் செல்வநாயகம் தயாபரம் அவர்கள் வழமைபோல எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி குழலோசையை நேர்த்தியாக வெளிக்கொணர்ந்து தேவையான தருணங்களில் அதனை ஒலிக்கச் செய்து அரியாணாவின் நடனங்களுக்கும் பாடகர் கோவிநாத் அவர்களின் பாடல்களுக்கும் மெருகூட்டினார்.

வீணை இசை வழங்கிய பிரபா தயாளன் அவர்களும் தனது வழமையானதும் நேர்த்தியானதும் விரலோசையை அந்த அற்குபுதக் இசைக்கருவி முலம் வழங்கி அரியானாவின் அரங்கேற்றத்தை மேன்மையுறச்செய்தார். வயலின் இசை வழங்கிய மயூரன் கிரிதரன் அவர்கள் வயதில் குறைந்தவராக இருந்தாலும் வாத்தியத்தில் வித்தகனாக விளங்கி அரியானவின் அரங்கேற்றம் மேலும் சிறப்புற வழிசமைத்தார் அத்துடன் பாடகர் அருண் கோபிநாத் அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அரங்கேறிய அனைத்து உருப்படிகளையும் அரியானா அவர்கள் தனது குருவின் வழிகாட்டலில் அற்புதமாக சமர்ப்பித்தார். வர்ணம் என்ற நீண்ட உருப்படியை அழகாகவும் அவதானத்துடனும் அவர்கள் சமர்ப்பித்ததை சபையோரும் ஏனைய நடன ஆசிரியையும் பாராட்டி கரகோசம் வழங்கினார்கள்..

பிரதம விருந்தினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரது உரைகளும் அங்கு இடம்பெற்றன.