LOADING

Type to search

கனடா அரசியல்

கனடிய மகளிர் கழகம்’ பிரதி வியாழன் தோறும் இரவு நடத்தும் மருத்துவர் போல் ஜோசேப் அவர்களின் மருத்துவக் கருத்தரங்கு 100 வாரங்களை எட்டியது

Share

கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘கனடிய மகளிர் கழகம்’ ( Canadian Women Council ) சார்பாக ஒவ்வொரு வியாழன் தோறும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை கடந்த சில வருடங்களாக மருத்துவர் போல் ஜோசேப் அவர்களினால் நடத்தப்பட்ட நடத்தப்பட்டு வருகிற மருத்துவ கருத்தரங்கு 100 வாரங்களை வெற்றிகரமாக நிறைவு செய்ததை முன்னிட்டு கடந்த வியாழன் அன்று மருத்துவர் போல் ஜோசேப் அவர்களுடைய கிளினிக்கில் நூறாவது வார நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.

பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் தலைமையில், சமூகச் செயற்பாட்டாளர் திரு.குயின்ரஸ் துரைசிங்கம் அவர்கள் முன்னிலைவகித்தார் .எழுத்தாளர் கவிஞர் திரு.அகணி சுரேஷ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்தனர்.கனடிய மகளிர் கழகத்தின் தலைவி றோகிணி கருப்பையா அவர்களும் அங்கு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போல் ஜோசேப் அவர்கள் யுத்தங்களாலும், இயற்கை அழிவுகளாலும் சில 100 பேர் அல்லது சில ஆயிரம் பேர் ஆண்டுதோறும் இறப்பதை பெரிதுபடுத்தும் நம் சமூகம் அல்லது அதைப் பற்றியே சில நாட்கள் ஊடகங்களில் உரையாடிக் கொண்டிருப்போர், புற்று நோய் என்ற தொற்றாத நோயாக உலகம் முழுமைக்கும் பரவிக்கொண்டிருக்கும் இந்த நோய், ஆண்டுதோறும் 20 மில்லியன் பேரை தாக்குகிறது .

ஒவ்வொரு ஆண்டும் சுமாராக 10 மில்லியன் பேரை அமைதியாக பலி கொண்டு கல்லறைக்குள்ளே சமாதியாக்கும் இந்த நோயைப் பற்றி பெரிதாக மருத்துவ உலகம் கண்டு கொள்வதில்லை என்றும் இந்த நோய் எப்படி,எதனால், யாருக்கு, வருகிறது இதன் பாதிப்புகள் என்ன, நோய் அறிகுறிகள் என்ன, வருமுன் எப்படி கண்டுபிடிக்கலாம், எப்படி புற்றுநோயை தடுக்கலாம் போன்ற பல விடயங்களை பட விளக்கங்கள் ஊடாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கனேடியன் வுமன் கவுன்சில் பொறுப்பாளர் திருமதி ரோகினி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

மேற்படி கௌரவிப்பு நிகழ்வில் பயனுள்ள மருத்துவக் கருத்துக்களை பகிர்ந்த கொண்ட மருத்துவர் போல் ஜோசப் அவர்களை பலரும் பாராட்டிச் சென்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.