LOADING

Type to search

இந்திய அரசியல்

கன்னியாகுமரி கண்ணாடி பாலம் பாதுகாப்பானதா? – அமைச்சர் எ.வ.வேலு பதில்

Share

தமிழகத்தின் தென்முனையில் உள்ள கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே சுற்றுலா பயணிகள் சென்றுவர கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ணாடி பாலத்தில் ஓரிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலம் கட்டப்பட்ட பிறகு சுமார் 17 லட்சம் பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர். அவ்வப்போது முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 16-8-2025 அன்று பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டபோது, 8 மீட்டர் உயரத்தில் ஆர்ச்சில் உள்ள போல்டுகளை சரிசெய்யும் பொழுது சுத்தியல் கை தவறி விழுந்துவிட்டது. அதன் விளைவாக கண்ணாடியின் மேல் பகுதியில் மட்டும் மெல்லிய விரிசல் ஏற்பட்டது. உடனடியாக சேதமடைந்த இடத்தில் மட்டும் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி தடுப்பாண்கள் அமைக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட கண்ணாடியை 2 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், அதே வடிவமைப்பில் அதே தரத்துடன் கம்பி இழையிலான கண்ணாடி 8-9-2025 அன்று பொருத்தப்பட்டது. மேலும், போதுமான எடையினைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாங்குத்திறன் உறுதி செய்யப்பட்டதில் கண்ணாடி பாதுகாப்பாக உள்ளது. 77 மீட்டர் நீளமுடைய கண்ணாடி பாலத்தில், ஒரே நேரத்தில், 650 நபர்கள் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்ததாரரின் பராமரிப்பு காலம் 10 ஆண்டுகள் என்பதால், சேதமடைந்த கண்ணாடி ஒப்பந்ததாரரின் செலவிலேயே சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது, அனைத்து பார்வையாளர்களும், கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.