LOADING

Type to search

இந்திய அரசியல்

கமல்ஹாசன் தலைமையில் மநீம அவசர ஆலோசனைக் கூட்டம்!

Share

சென்னையில் நாளை கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம், தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நாளை 20.03.2026 (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மநீம-வின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மநீம தரப்பில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் கோரப்படும் நிலையில், திமுக 4 முதல் 5 தொகுதிகளை தர முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய சொந்த சின்னமான ‘டார்ச் லைட்’ சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாகவும், திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட மறுப்பும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.