கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்
Share
வானம்பாடி கவிதைச் சஞ்சிகை மூலம் 1975ம் ஆண்டு காலப் பகுதியில் பல ஈழத்துக் கவிஞர்களுக்கு உற்சாகம் அளித்து எழுதத் தூண்டிய பெருகவிஞர்!
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை அவரது மறைவையொட்டி இரங்கல் கூட்டம் ஒன்றை 31-11-2025 அன்று ஈரோட்டில் நடத்துகின்றது
எழுத்தாளரும், தமிழ் கவிஞருமான தமிழன்பன் சென்னையில் தனது 92வது வயதில் காலமானர். இவர் , ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக 200ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். மரபுக்கவிதை, புதுக்கவிதை, நாடகங்கள், குழந்தைகள் இலக்கியம் ஆகிய பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார்.
பாரதிதாசன் மரபைச் சேர்ந்த தமிழன்பன், வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர். அத்துடன் வானம்பாடி கவிதைச் சஞ்சிகையில் 1975ம் ஆண்டு காலத்தில் பல ஈழத்துக் கவிஞர்களுக்கு உற்சாகம் அளித்து எழுதத் தூண்டிய பெருகவிஞர் இவராவர். சினிமா துறை, செய்தித்துறைகளிலும் அனுபவம் பெற்றவர். தமிழக அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினர் மற்றும் அரிமா நோக்கு என்ற ஆய்விதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஈரோடு தமிழன்பன்,92, சில நாட்களுக்கு முன்னர் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்; மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற ந. செகதீசன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல், இவ்வா கூறியுள்ளார்.
அன்னாரின் மறைவையொட்டி ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை வெளியிட்டுள்ள இரங்கற் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பெற்றுள்ளது.
” கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற ந. செகதீசன் அவர்கள் தனித்துவம் மிக்க பெரும் இலக்கியவாதியாவார். அவர் ஆரம்பத்தில் ஈரோடு மதரசா உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பின்னர் சென்னை புதுக் கல்லூரியில் பேராசிரியராகப் ஓய்வு பெற்றார். மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மரபுக் கவிதை, புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ கவிதை ஆகியவற்றில் புகுந்து படைப்பிலக்கியத் துறையின் உச்சத்தைத் தொட்டவரும் கூட” என்று ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை வெளியிட்டுள்ள இரங்கற் செய்தியில் குறிப்பிடப்பெற்றுள்ளது.




















