LOADING

Type to search

இலங்கை அரசியல்

காரைநகர் பாலத்தடியில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

காரைநகர் பாலத்தடியில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் 3ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமை அன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் – களபூமி பகுதியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது – 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும் லான்ட்மாஸ்டர் ஒன்றும் கடந்த 1ஆம் திகதி இரவு காரைநகர் பாலத்தடியில் மோதி விபத்து சம்பவித்தது.

இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.