கிராம மட்ட அபிவிருத்தியில் பழ மரக்கன்றுகளை நாட்டும் திட்டம் மயிலிட்டியில் ஆரம்பம்
Share
கிராம மட்ட அபிவிருத்தியில் பழ மரக்கன்றுகளை நாட்டும் திட்டம் மயிலிட்டியில் நேற்றய தினம் (20/012026) புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஒரு அங்கமாக மயிலிட்டி தையிட்டியைச் சேர்ந்த தாய்மார்கழகப் பயனாளிகளுக்கு இப் பழமரக்கன்றுகள் அவர்களது வீடுகளுக்குச் சென்று நாட்டப்பட்து.குறித்த நிகழ்வானது வைபவ ரீதியாக மயிலிட்டி குடும்பநல உத்தியோகத்தர காரியாலயத்தில் இடம்பெற்றது இந் நிகழ்வில் கிராம உத்தயோகத்தர்கள் யாழ் பல்களைக் கழக சமுதாய மற்றறும் குடும்ப மருத்துவத்துறையினர் சமுக மட்ட அமைப்புக்கள் ரீச்சாவின் விவசாய வல்லுணர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் வீடுகளுக்குச் சென்று பழ மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. குறிப்பாக பெருமளவில் தொடர்ச்சித் தன்மையான வருமானம் ஈட்டத்தக்கதான மாதுளை, கொய்யா,மா போன்ற பழ மரங்கள் நாட்டபபட்டன விசேடமாக 15 பயனாளிகளுக்கு 200 இற்கும் அதிகமான கன்றுகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். தெரிவு செய்யப்பட் பயனாளிகளுக்கு ரீச்சா ஒன்றினைந்த பண்ணையில் ஒரு நாள் செய்முறையுடன் கூடிய முழுநாள் பயிற்சி வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இவ் கிரமமமட்ட அபிவிருத் தித்திட்டத்தில் பல அமைப்புக்கள் கைசேர்த்து கிராமத்தை கட்டியெழுப்புதல் சிறப்பிற்குரியதாகும் அந்த வகையில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியின் ஆதரவுடனும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பினரின் சமுக மட்ட
மட்ட அமைப்புக்ககளை ஒன்றினைத் தலுடனும் பேராசிரியர் சிவானந்தன் ஆய்வுகூடம் (ஐக்கிய அமரிக்கா) அவர்களின் நிதிப் பங்களிப்புடனும் மனித நேயம் அறக் கட்டளையினரின் மக்களை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டுடனும் ரீச்சா ஒருங்கிணைந்த பண்ணையினரின் தொழினுட்ப ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடனும் இவர்களுடன் Digi path Study இணைப்பாளர்களின் உதவியுடனும் இவ் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




















