LOADING

Type to search

சினிமா

கிருஷ்ணாவின் 25வது படத்தில் பிந்து மாதவி

Share

தமிழ் திரையுலகில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர்களில் நடிகர் கிருஷ்ணா தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். முதன்மை கதாபாத்திரம் மட்டுமின்றி கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணாவின் 25வது திரைப்படம் குறித்த புது பதிவேற்றம் வெளியாகி உள்ளது. மனுமந்தா கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் கிருஷ்ணா நடித்துள்ளார். இது நடிகர் கிருஷ்ணாவின் 25வது திரைப்படம் ஆகும். கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மூலம் கழுகு படத்திற்கு பிறகு நடிகர் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கேரளா மற்றும் குற்றாலம் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்திற்கு கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளையும், கவிண் படத்தொகுப்பு பணிகளையும், வெங்கட் பாலா கலை இயக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பதிவேற்றங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.