LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிளிநொச்சியில் பல மக்கள் நலன்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்த இலங்கைப் பிரதமர் ஹரிணி!

Share

பு.கஜிந்தன்

கிளிநொச்சியில் ப மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று (21.12.2025) சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அன்று காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர், அதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்துக்கும் வருகை தந்தார்.

ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் பிரதமர் பக்திபூர்வமாகப் பங்கேற்றார். வழிபாடுகளைத் தொடர்ந்து, மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் வரலாற்றுப் பின்னணி, ஐதீகங்கள் மற்றும் ஆலயத்தின் சிறப்புக்கள் குறித்து பிரதமர் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதமருடன் இணைந்து, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ க.இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோரும் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.