குடும்ப விளக்கின் நான்காம் ஆண்டு நினைவுநாள் | திரு. சத்தியசீலன் சத்தியகுமார் (குமார்)
Share
(யாழ். சுருவில் ஐயனார் கோவிலடி, கனடா)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
ஒருவன் செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவேகூடாது.
ஆனால் அவன் செய்த தீமையை அந்த
நொடியிலே மறந்து விடவேண்டும்
பனி பொழியும் தேசமதில் பாங்குடனே வாழ்ந்த
திருமகனாம் குமார் என்னும் அழகனே
கடல் கடந்து நீ சென்று நாம் வாழ
வழிவகுத்தாய்
இன்றும், என்றும் உன் நினைவு அழியாது
மனங்களில் நிறைந்தாய் மாசற்ற மனிதராய் உணர்ந்தோம்
மனதை ஈர்ந்தவராய் பாராட்டு பெற்று பதவி
உயர்வுகள் தேடி வந்தன
சினம் கொள்ளல் உன்னிடத்தில் சிறிதளவும்
இல்லை
சீரான உடைகள், சிங்கார நடை, சிரித்தமுகத்தோடு நட்பு
வட்டங்கள், உறவுகள் நடுவே குதூகலம் நிறைந்து
கொண்டாடி மகிழ்ந்த நாட்கள் இனிவருமா……
வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போலதான்
நிறைய நிறுத்தங்கள், வழித்தடம்மாற்றங்கள்
அனைத்தையும் ரசித்துக்கொண்டே பயணிக்க
கற்றுக்கொள்வோம். வாழ்விலும்கூட…..
வேதனை, சோதனை, சாதனை அனைத்தும் கடந்து
காலத்தைக் கழித்து வாழும் நாங்கள் என்றும் உன்
நினைவுடன், எங்களை வாழவைக்கின்றாய் என்ற
மகிழ்வுடன் உன் ஆத்மா சாந்திபெற மலர்தூவி
வணங்குகின்றோம்.
28-12-2022 திதி அன்று அன்னாரின் இல்லத்தில் ஆத்மசாந்திப்பிரார்த்தனை
சிறப்பாக நடைபெற்றது.
என்றும் உன் நினைவுடன் வாழும் குடும்ப உறவுகள்





















