LOADING

Type to search

சினிமா

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ படத்தின் வெளியீடு பதிவேற்றம்

Share

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ‘அசுரன்’, ‘விடுதலை-2’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, நடிகர் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். தொடர்ந்து, கென் கருணாஸ் இயக்கி வந்த முதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கென் கருணாஸ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யூத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிறை படம் மூலம் பாராட்டுகளை அனிஷ்மா கதாநாயகியாகவும், சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யூத் படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு பதாகை வெளியிட்டு அறிவித்துள்ளது.