LOADING

Type to search

இலங்கை அரசியல்

கொக்கட்டிச்சோலையில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய உறவினர் ஒருவருக்கு 10 வருட சிறைத் தண்டனை விதித்த மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Share

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே,பிரபாகரன் கடந்த மாதம் 26ம் திகதி தீர்ப்பளித்தார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியை கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் 21 ம் திகதி பாலியல் துஷ்பிரயேதகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் மாமா முறையான குறித்த நபரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்

குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த பெப்பிரவரி 26 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது குறித்த நபர் ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் குற்றவாளியாக கண்டறியப்பட்டதையடுத்து அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.