LOADING

Type to search

உலக அரசியல்

கொடுத்த வாக்கை காப்பாற்றிய ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்

Share

 அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்தது. உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக வளைகுடா நாடுகளை இந்த பாதையே உலகத்துடன் இணைத்து வந்தது. எனவே எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. முன்னதாக இந்திய கப்பல்களுக்கு மட்டும் ஈரான் இந்த வழியாக செல்ல அனுமதி அளித்ததாக கூறப்பட்டது. பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உடன் அண்மையில் தொலைபேசியில் பேசினார். மேலும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் ஈரான் அரசாங்கம் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய 2 கப்பல்கள் பதற்றம் நிலவும் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடற்பகுதிக்கு வந்துள்ளன. 40,000 மெட்ரிக் டன் எல்பிஜி ஏரியாவு ஏற்றி வந்த ஷிவாலிக் கப்பல் தற்போது இந்தியக் கடற்படையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. இது இன்னும் இரண்டு நாட்களில் மும்பை அல்லது காண்ட்லா துறைமுகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல அதிகளவில் எல்பிஜி ஏற்றி நந்தா தேவி கப்பலும் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்துவிட்டது.