LOADING

Type to search

இலங்கை அரசியல்

கொழும்பு ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மன்னார்- முசலி பண்டாரவெளி வெள்ளிமலையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு.

Share

(மன்னார் நிருபர்)

(15-02-2026)

கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் 14ம் திகதி சனிக்கிழ இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

-உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த முஜாஹித் முஹம்மது சஹ்ரின் (வயது-20) என தெரிய வந்துள்ளது.

குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் ,சம்பவ தினம் சிகை அலங்கரிப்பு (தலை முடி வெட்ட) சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 20 வயதான மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.