க.பொ.த சாதாரண பரீட்சையில் சாதனை படைத்த சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவர்கள்மாணவர்கள் கௌரவிக்கப்பெற்றனர்!
Share
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் மற்றும் ஏ பி சித்திகளை பெற்றுக்கொண்ட, சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் மாணவர்கள் 22ம் திகதி அன்றையதினம் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் 22ம் திகதி அ ன்றையதினம் இவ்வாறு கல்லூரியில் வைத்து கௌரவிக்கப்பட்டனர். இதன்போது மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரியின் முதல்வர் திருமதி சுலபாமதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி அ.வேலுப்பிள்ளை முன்னாள் ஆசிரியர் பூசலட்சுமி பொன்னுத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் அதிபர்கள்/ஆசிரியர்கள் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கௌரவிப்புக்கான நிதி அனுசரணையை முன்னாள் கணித பாட ஆசிரியர் சபாபதிப்பிள்ளை பாலகிருஷ்ணன் குழுவினர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
























