LOADING

Type to search

இலங்கை அரசியல்

சமகாலக் காண்பியக்கலைக் காட்சி | யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றன ‘மாணிக்க மங்கயற்கரசி பண்பாட்டு மைய அறக்கட்டளையின்’ ஏற்பாட்டில் “எதிரொலிப்பு” எனப்படும் சமகாலக் காண்பியக் கலைக் காட்சி

Share

மாணிக்க மங்கயற்கரசி பண்பாட்டு மைய அறக்கட்டளையின் ஏற்பாட்டில் “எதிரொலிப்பு” எனப்படும் சமகாலக் காண்பியக் கலைக் காட்சியொன்று 199, கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள முதலியார் வளவு மண்டபத்தில் இம்மாதம் பதினெழாம் திகதி சனிக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு திறந்து வைக்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியில் இருபத்தியொரு இலங்கைத் தமிழ் பேசும் காண்பியக் கலைஞர்கள் தமது படைப்புக்களை வழங்கியுள்ளார்கள். இக்கலைஞர்கள் யாழ்ப்பாணத்துடன் ஏதேவெரு வகையில் தொடர்புபட்ட வடக்கு,கிழக்கு,மலையகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும் இக்கலைஞர்கள் பலர் சர்வதேச அளவிலும் கொழும்பிலும் தமது படைப்புகளை காட்சிப்படுத்தியிருப்பினும் குழுவாக தமது படைப்புகளை யாழ்ப்பாணத்தில் காட்சிப்படத்தவது இதுவே முதல் தடைவை என்பது முக்கியமானது.

இக்காட்சியானது எமது பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறைக் கலைஞர்களின் மிகவும் சிக்கலுக்குள்ளான வாழ்க்கை அனுபவங்களை வேறுபட்ட கலையாக்க அணுகுமுறைகளினூடு பகிர்ந்து கொள்கின்றது. அதானால் இது வெறும் பொழுதுபோக்காகவும் கேளிக்கையாகவும் அல்லாமல் வரலாற்று சுவடிகளாகவும் நினைவு பதிவுகளாகவும் மௌன சாட்சியங்களாகவும் அமைந்துள்ளன.அந்தவகையில் இது இப்பிரதேசத்தின் கலை வரலாற்றை மட்டுமன்றி சமூக,அரசியல்,வரலாற்றை அறிந்து கொள்வதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. இக்காட்சியை 17ம் 18ம் திகதிகளாகிய சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் தினமும் காலை10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இலவசமாகப் பார்வையிட முடியும்