LOADING

Type to search

சினிமா

சமந்தா தயாரித்து நடித்துள்ள படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

Share

நடிகை சமந்தா கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘சுபம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் படமாகும். இருப்பினும், அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் ‘மா இன்டி பங்காரம்’. நந்தினி ரெட்டி இயக்கும் இந்த படத்தில் சமந்தா, கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு கதை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மா இன்டி பங்காரம் படத்தின்  முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மா இன்டி பங்காரம் திரைப்படம் கோடை விடுமுறையில், மே 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.