LOADING

Type to search

இந்திய அரசியல்

சவுதி விபத்தில் 42 இந்தியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது – மு.க.ஸ்டாலின்

Share

சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

     சவுதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என்பதும், அனைவரும் சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் பல இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள், தேவையான மருத்துவ சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.