LOADING

Type to search

சினிமா

‘சிறை’ படம் வருகிற 23-ந்தேதி ஒடிடியில் வெளியீடு

Share

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் ‘சிறை’. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், எஸ்.எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் எஸ்.எஸ் லலித் குமார் மகன் எல்கே அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ‘சிறை’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.

‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது. இந்த நிலையில் ‘சிறை’ படத்தின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘சிறை’ படம் குடியரசு தினத்தையொட்டி வருகிற 23-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.