LOADING

Type to search

சினிமா

சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள 10வது படத்தின் பதிவேற்றம்

Share

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்ததைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை மேடையில் அறிவித்தார். சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் 10-வது படமான இதை அம்மாமுத்து சூர்யா இயக்குகிறார். இவர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாக இருந்த ‘ஹேப்பி எண்டிங்’ திரைப்படத்தின் இயக்குநர். அந்தப் படத்தின் புரோமோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளிப்போனதால் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. படத்தின் நடிகர்கள் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விரைவில் இப்படம் குறித்த இதர தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண்ராஜா காமராஜ், கார்த்திக் வேணுகோபாலன், சிபி சக்கரவர்த்தி, பி.எஸ்.வினோத்ராஜ், சிவகுமார் முருகேசன் ஆகியோரை சிவகார்த்திகேயன் இயக்குநராக அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.