LOADING

Type to search

உலக அரசியல்

சீன அதிபர் ஜின்பிங்குடன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு

Share

அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். தற்போது தென்கொரியாவில் அதிபர் டிரம்ப் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நாளை நடைபெற உள்ள ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தென்கொரியாவின் புசான் நகரின் இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங் டிரம்பிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை மூலம் உலக பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.