LOADING

Type to search

இலங்கை அரசியல்

சுன்னாகம் பொலிஸ்நிலைய தமிழ்பேசும் பொறுப்பதிகாரியின் மற்றொரு நடவடிக்கையாக சங்கிலி திருட்டில் ஈடுபட்ட மைலிட்டி இராணுவ முகாமைச் சேர்ந்த சிங்களச் சிப்பாய் கைது!

Share

சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

24ம் திகதி காலை அன்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இராணுவ சிப்பாய் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்நிலையில் குறித்த சந்தேகநபரான, மைலிட்டி இராணுவ முகாமில் கடமை புரியும் சிப்பாய் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அப்பகுதியில் உள்ள சிரிவி கெமராக்களைச் சோதனையிட்ட பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ் குழு உடனடி நடவடிக்கையில் இறங்கியது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் பதவியேற்ற பின்னர் கைது நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.