LOADING

Type to search

கனடா அரசியல்

“சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பல ஈழத்து படைப்பாளிகளையும் கவிஞர்களை முதலில் வரவேற்று இடமளித்தது மொன்றியால் மாநகரே”

Share

மொன்றியலில் கவிதாயினி மோகனின் கடந்தவையும் கடப்பவையும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம்

“எமது பிறந்த மண்ணாம் ஈழத்திலிருந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்அங்கு தமது வாழ்க்கையைத் தொடரை முடியாமல் பல ஈழத்து படைப்பாளிகளும் கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் எங்கு போவது என்று திட்டங்கள் இல்லாமல் மொன்றியால் நகரில் கால்பதித்த போது முதலில் வரவேற்று இடமளித்தது இந்த மொன்றியால் மாநகரமே. அவர்களுள் பலர் ரொறன்ரோ உட்பட பல நகரங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றாலும்; இன்று பல இலக்கிய நெஞ்சங்கள் இங்கு தொடர்ச்சியாகத் தங்கியிருந்து உள்ளத்தில் உறுதியுடன் இங்கு படைப்புக்களைத் தொடர்ந்து தந்த வண்ணம் உள்ளார்கள். அவர்களின் இன்றை நாயகி கவிதாயின் உமா மோகனும் ஒருவர். இந்தவகையில் இன்று கனடா வாழ் தமிழ் மக்களின் இரண்டாவது தளமாகவும் மொன்றியால் மாநகர் திகழ்கின்றது என்றால் அது மிகையாகாது”
இவ்வாறு மொன்றியலில் கவிதாயினி மோகனின் கடந்தவையும் கடப்பவையும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றி கனடா ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் அவமர்கள் புகழாரம் சூட்டினார்.

மொன்றியல் நகர சபை மண்டபம் விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது ஜூன் 22ம் திகதி ஞாயிறு கவிஞர் எழுத்தாளர் திருமதி உமா மோகன் வாழ்வில் ஓர் பொன் மலர் பொழுதாகும். கனடா உதயன் வார இதழில் பல மாதங்கள் சுமார் 102 வாரங்களாக எழுதப்பெற்று பல நூறு வாசகர்களால் தொடர்ச்சியாக வாசித்து நேசிக்கப் பெற்ற தொடர் கவிதை வரிகளான கடந்தவையும் கடப்பவையும் தொகுப்பு நூலாக்கம் பெற்று பேராசிரியர் இ பாலசுந்தரம் அவர்களது தலைமையில் வெளியீட்டு விழா ஆரம்பமானது உதயன் வார இதழில் ஒன்றிய வாழ் ஆசிரியை முதுகலாமணி திருமதி உமா மோகன் எழுதி வெளியான முதலாவது படைப்பு இதுவாகும். செந்தமிழ் பள்ளி என்னும் கல்வி சாலையை நிர்வாகம் செய்து தமிழ் மொழி பயிற்றுவித்து வரும் திருமதி உமா மோகன் சிறந்த ஓர் தமிழ்ப்பற்றாளரும் படைப்பாளியும் இலக்கியவாதியும் ஆவார். அது மட்டுமல்ல பேராசிரியர் பாலசுந்தரம் அவர்களின் நன் மாணவிகளுள் ஒருவர் அவர் குரு பக்தியை நன்றியுடன் மெய்ப்பிக்கும்வண்ணம் பேராசிரியர் அவர்களது நல்லாசிகளுடன் அவரையே தலைமை ஏற்க வைத்து தனது நன்றி உணர்வை காணிக்கையாகியமை குழுவிற்கு சிஷ்யைக்கும் உள்ள பக்தியை மரியாதையை காணக் கூடியதாக இருந்தது ரொறன்ரோவிலிருந்து மொன்றியாலுக்கு வருகை தந்திருந்த உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர் எம் லோகேந்திர லிங்கம் திருமதி லோகேந்திரலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து விழாவிற்கு சிறப்பு செய்தனர்

பத்திரிகை ஆசிரியரது சிறப்புரை மொன்றியல் வாழ் இலக்கியவாதிகளுக்கும் உதயனுக்கும் உள்ள இலக்கிய உறவை மெய்ப்பித்து மகிழ்ச்சியை வழங்கியது.

நூல் அறிமுகம் நூலாசிரியர் பற்றி மொன்றியல் வாழ் மூத்த எழுத்தாளர் திரு வீணை மைந்தன் சிறப்புரை யாற்றினர் நூலை நன்கு வாசித்து ஆய்வுரை வழங்கிய திரு ஆறு ஸ்ரீ கந்தராசாவின் விரிவான உரை கவிதை நூலை வாங்கி வாசிக்க தூண்டுவதாக அமைந்தது. பேராசிரியர்கள் கலாநிதி நா.சுப்பிரமணியன் கலாநிதி திருமதி கௌசல்யா சுப்ரமணியன் இருவரினதும் வாழ்த்துரைகள் திரு வீணைமைந்தன் அவர்களால் வாசிக்கப்பெற்றதுடன் பேராசிரியர் விசாக ரூபன்( தமிழ் துறை தலைவர் – யாழ் பல்கலைக்கழகம்) – நூலாசிரியரின் சகோதரியும் தாயாரும்( ஆஸ்திரேலியா- மெல்போன் நகரிலிருந்து) அனுப்பிய ஒலி ஒளி வீடியோ பதிவு திரையில் காட்சிப்படுத்தப்பட்டன. திருமதி உமா மோகனின் ஏற்புரையுடன் சுவையான சிற்றுண்டிகளும் உமாவின் கவிதை வரிகளும் சுவையூட்டின.

மேற்படி கவிதை நூல் வெளியீட்டு விழாவில் மண்டபத்தை நிறைத்து இறுதிவரை காத்திருந்து நூற் பிரதிகளை பெற்றுச் சென்ற பார்வையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்று அனைத்து உரையாளர்களும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

–மொன்றியாலிருந்து வீணை மைந்தன்