சுமார் 8 கோடி செலவில் மூன்று மாடிக்கட்டிடம் புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது.
Share
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(14-10-2025)
புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு தேவையாக இருந்த பாடசாலைக் கட்டிடம் 13ம் திகதி திங்கட்கிழமை (13) பாடசாலையின் அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் முயற்சியினால், 08 கோடி ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இக் கட்டிடத்தில் சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் அமருமளவான மண்டபம் உள்ளிட்ட வகுப்பறைகளை கொண்டவையாகும்.
இந்நிகழ்வுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் பைசல், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான தாஹிர், புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டவர்களுடன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




















