LOADING

Type to search

இந்திய அரசியல்

சுற்றுலாக்கள் மூலம் ரூ.2.37 கோடி வருவாய் – அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

Share

தொகுப்பு சுற்றுலாக்களால் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக இயக்கப்படும் தொகுப்பு சுற்றுலாக்களான எட்டு நாட்கள் கோவா மந்திராலயம் சுற்றுலா, நான்கு நாட்கள் ஆறுபடை வீடு சுற்றுலா, ஒரு நாள் திருவண்ணாமலை சுற்றுலா , மூன்று நாட்கள் ஊட்டி, கொடைக்கானல், மூனார் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சுற்றுலாக்களால் ரூ.2.37 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் தலைமையில் இன்று சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக இயக்கப்படும் தொகுப்பு சுற்றுலாக்களான எட்டு நாட்கள் கோவா மந்திராலயம் சுற்றுலா, நான்கு நாட்கள் ஆறுபடை வீடு சுற்றுலா, ஒரு நாள் திருவண்ணாமலை சுற்றுலா, மூன்று நாட்கள் ஊட்டி, கொடைக்கானல், மூனார் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சுற்றுலாக்களால் ரூ.2.37 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், படகு குழாம்கள், தொலைநோக்கு இல்லங்கள் மற்றும் தொகுப்பு சுற்றுலாக்கள் போன்றவற்றால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.