LOADING

Type to search

இலங்கை அரசியல்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சி பருத்தித்துறை – டிக்வெல்ல வரையான சைக்கிள் பயணம் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பம்!

Share

இலங்கையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் முயற்சியாக சர்வதேச சுற்றுலாகளை ஈர்க்கும் வகையில் பருத்தித்துறை முதல் டிக்வெல்ல வரையில் சைக்கிள் பயணம் (29,10) நள்ளிரவு 12.00 மணிக்கு பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

36 மணித்தியாலங்களில் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் பயணமாக கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள குறித்த சைக்கிள் பயணத்தில் ஈடுபடவுள்ளனர்

வடமராட்சி – பருத்தித்துறை, சற்கோட்டை முனை பகுதியில் இருந்து நேற்று (29) நள்ளிரவு 12.00 மணிக்கு ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மாத்தறை மாவட்டம் – டிக்வெல்ல முனையை (31) நள்ளிரவு 12.00 மணிக்கு சென்றடையும் வகையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் தென்னிந்திய சுற்றுலாத்துறை அமைச்சின் இளைஞர்கள், மற்றும் சுற்றுலாவில் பங்கெடுக்க வந்த இளைஞர்கள் உள்ளடங்கலாக சர்வதேச சைக்கிள் ஓட்ட வீரர்கள் உள்ளிட்ட 65 சைக்கிள் ஓட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.