சூட்சுமமான முறையில் பாலை மர தீராந்திகளை எடுத்து வந்த சந்தேகநபர் கைது!
Share
பு.கஜிந்தன்
முட்கொம்பன் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பாலை மர தீராந்திகளை கொண்டு சென்ற ஒருவர் பொலிஸாரால் 14ம் திகதி அன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூட்சுமமான முறையில் கப் ரக வாகனத்தின் கீழ் தீராந்திகளை மறைத்து கொண்டு சென்றவேளை, சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சங்குப்பிட்டியில் கடமையில் இருந்த பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது விசுவமடுவைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




















