LOADING

Type to search

சினிமா

சூர்யாவின் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இது சூர்யாவின் 46-வது படமாகும். நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இதில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல்காட்சி பதாகை சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளது.