LOADING

Type to search

சினிமா

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் முன்னோட்ட பதிவேற்றம்

Share

நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படமாக உருவாகி வரும் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ரவீனா டான்டன், பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிமிஷ் ரவி மேற்கொள்ள நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார். 2005ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போன்றே “விஸ்வநாத் அன்ட் சன்ஸ்” படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்து இருக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஜூலை மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் முன்னோட்டம் மார்ச் 16ம் தேதி மாலை 4.06 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.