செம்மணியில் குற்றவியல் சம்பவங்கள் இடம் பெற்றமைக்கான தடயங்கள் உண்டுதொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் அறிக்கை.
Share
ந.லோகதயாளன்
யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகு ழியில் நீல நிறப் புத்தகப்பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற் றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4 – 5 வயதுடைய சிறுமியினு டையது என்று சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவால் நீதிமன் றத்தில் தெரிவிக்கப்பட்டது.செம்மணிப் புதைகுழியில் இருந்து நீல நிறப் புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவரின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு (நேற்று) முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ்ப் பாணம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா கடந்த 10ஆம் திகதி கட்டளை ஒன்றினை வழங்கியிருந்தார்.இந்நிலையில் நேற்று செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப் பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அந்த என்புத் தொகுதி தொடர்பான அறிக்கை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
நீல நிறப் புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற் றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் – 25 என அடையாளமிடப்பட்ட என்புத் தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 – 5 வயது டையதாக இருக்கும் எனவும் சட்ட மருத்துவ அதிகாரி மன்றில் தனது அறிக்கையை வெளியிட்டார்.மேலும் எஸ் – 48, எஸ் – 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக் கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் இருப்பதாகவும் மன்றுக்கு சட்ட மருத்துவ அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டது.புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத் தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மன்றால் அறிவுறுத்தப்பட்டது..
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை முன்வைத்திருந்த நிலை யில் சட்டத்தரணி ஒருவரின் பிரசன்னத் துடன் அகழ்வுப் பணி இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்வது தொடர்பில் பரிசீலிப்பதாக யாழ்ப்பாணம் நீதிவா னால் மன்றில் அறிவிக்கப்பட்டது.செம்மணி மனிதப் புதைகுழி தொடர் பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பிர தேசத்துக்குத் தனது பிரசன்னம் முக்கியமானது எனவும், தன்னை அனுமதிக்குமாறும் மன்றில் கோரிக்கை முன்வைத்தார்.அந்தக் கோரிக்கை நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே மன்றில் இருக்கின்ற கட்ட ளைகளுக்கு அமைவாக நபர் ஒருவர் செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம் செய்கின்றபோது மன்றுக்கு முறையாக விண்ணப்பம் செய்து தான் விஜயம் செய்வதற்கான காரணத்தைக் குறிப் பிடும் நடைமுறை உள்ளதை நீதிவான் மன்றில் எடுத்துரைத்தார். சமர்ப்பணங்களையடுத்து நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சட்டத்தரணி ஒருவரின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணி இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்வது தொடர்பில் பரி சீலிப்பதாக நீதிவானால் மன்றில் அறி விக்கப்பட்ட




















