LOADING

Type to search

இலங்கை அரசியல்

செம்மணி சித்துப்பாத்தி புகைகுழிகளிலிருந்து மேலும் மூன்று மனித எலும்பு தொகுதிகள் புதிதாக அடையாளம்!

Share

சித்துப்பாத்தி புதைகுழி அகழ்வு பணிகள் 31ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட போது புதிதாக மூன்று மனித எலும்பு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

31ம் திகதி அன்றையதினம் மூன்று எலும்பு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மனித எலும்பு தொகுதிகள் இன்றையதினம் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது.

அந்தவகையில் இதுவரை மொத்தமாக 105 எலும்பு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமையும், ஆகஸ்ட் 2ம் திகதி மற்றும் ஆகஸ்ட் 3ம் திகதி திங்கட்கிழமை ஸ்கேன் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.