LOADING

Type to search

சினிமா

ஜனநாயக படத்துடன் போட்டி போடும் பராசக்தி படம்

Share

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. அதாவது, ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி அன்று வெளியிடப்படுகிறது. அதனால், 4 நாட்களுக்கு பிறகு பராசக்தி ஜனவரி 14ம் தேதி அன்று திரைக்கு வருவதாக கூறப்பட்டது. பராசக்தியில் இதுவரை வெளியீடு தேதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. என்றாலும், பராசக்தி படத்தை ஜனநாயகனுக்கு போட்டியாக முன்கூட்டியே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.